உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டிராக்டர் மோதி தொழிலாளி பலி

டிராக்டர் மோதி தொழிலாளி பலி

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த நேத்தப்பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன், 54.மறைமலை நகர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மெஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து சித்தாமூர் நோக்கி சென்றார்.புதினாத்தோட்டம் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் முருகன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் போலீசார் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிந்து விபத்து ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி