மாணவிக்கு லவ் டார்ச்சர் வாலிபர் கைது
பெரம்பூர், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி, மாநகராட்சி பள்ளியில் படித்து வருகிறார்.சில நாட்களாக, மாணவி பள்ளி சென்று வரும் போதெல்லாம், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், மாணவியை பின்தொடர்ந்து சென்று, காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து, மாணவியின் தாய் அளித்த புகாரின்படி, செம்பியம் மகளிர் போலீசார், கொடுங்கையூரை சேர்ந்த இளம்பரிதி, 20, என்ற வாலிபரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.