உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடலுாரில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

கூடலுாரில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

மறைமலை நகர்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்வின், 24. மறைமலை நகர் அடுத்த கூடலுார் பகுதியில் வாடகைக்கு தங்கி, மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் யாரும் இல்லாத போது, மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஜன்னல் வழியாக இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அஷ்வின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ