உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யாற்றில் மூழ்கிய வாலிபர் உயிரிழப்பு

செய்யாற்றில் மூழ்கிய வாலிபர் உயிரிழப்பு

உத்திரமேரூர்: செய்யாற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார். உத்திரமேரூர் அடுத்த இளையனார்வேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரன், 37; விவசாய கூலித் தொழிலாளி. இவர், நேற்று காலை 10:00 மணியளவில், இளையனார்வேலுாரில் இருந்து செய்யாற்றின் வழியே, நெய்யாடுபாக்கம் சிவன் கோவிலுக்குச் சென்றார். அப்போது, செய்யாற்றைக் கடக்கும் போது, நீரில் மூழ்கினார். தகவலறிந்த மாகரல் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, உடலை மீட்டனர். பின், பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை