சாலை விபத்தில் வாலிபர் பலி
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம், வடக்குப்பட்டைச் சேர்ந்த சீதாபதி மகன் தேவேந்திரன், 30. நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு, பஜாஜ் பல்சார் இருசக்கர வாகனத்தில், திருக்கழுக்குன்றம் சென்றுவிட்டு, வடக்குப்பட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம், அவரது வாகனத்தில் மோதி படுகாயமடைந்தார். திருக்கழுக்குன்றம் போலீசார், அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பலனின்றி, நேற்று பிற்பகல் இறந்தார். இதுகுறித்து, மனைவி திவ்யா புகார் அளித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.