உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உள்நாட்டு முனையம் முதலில் திறப்பு சென்னை விமான நிலையத்தில் பணிகள் தீவிரம்

உள்நாட்டு முனையம் முதலில் திறப்பு சென்னை விமான நிலையத்தில் பணிகள் தீவிரம்

பயணிகள் மற்றும் விமான போக்குவரத்தின் அவசர, அவசிய நிலையை கருத்தில் கொண்டு, சென்னை விமான நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டு வரும் உள்நாட்டு முனையத்தை முதலில் திறக்க விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. வரும் ஏப்ரலில் உள்நாட்டு முனையத்தையும், அடுத்த சில மாதங்களில் புதிய பன்னாட்டு முனையத்தையும் திறக்கும் வகையல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இந்திய விமான நிலைய ஆணையத்தின் விரிவாக்க திட்டத்தின் கீழ், சென்னை விமான நிலைய மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. புதிய பன்னாட்டு, உள்நாட்டு முனையங்கள், இரண்டாவது ரன்வே விரிவாக்கம், கார்கோ காம்ப்ளக்ஸ் ஆகிய பணிகள் 2,300 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கால அட்டவணைப்படி, கடந்த 2010ம் ஆண்டே முடிவடைந்து, பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் இதுவரை பணிகள் முடியவில்லை.தாமதத்திற்கு காரணம்பணிகள் வரையறுக்கப்பட்ட காலத்தில் முடிவடையாததற்கான காரணத்தை கேட்டபோது, 'புதிய பன்னாட்டு, உள்நாட்டு முனையங்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் கட்டுவதற்கு பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலங்கள் தேவைப்பட்டன. இதுகுறித்த பேச்சுவார்த்தையில் விமான நிலைய ஆணையத்திற்கும், பாதுகாப்பு துறைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட மாற்று நிலத்தை பெற பாதுகாப்பு துறை பின் மறுத்தது. விரிவாக்க பணிகளுக்கு தேவையான 15 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பிற்கு ஈடான நிலத்தை கேட்டது. இதனால், பணி துவங்குவதில் இழுபறி ஏற்பட்டது.இறுதியாக, திருக்கழுக்குன்றம் அருகே அடையாளம் காட்டப்பட்ட நிலத்தை எடுத்துக் கொள்ள பாதுகாப்பு துறை சம்மதித்தது. இதனால், பல மாதங்கள் பணிகள் முடங்கின' என, விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன் விமான நிலைய விரிவாக்க பணிகளை ஆய்வு செய்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அகர்வால், டிசம்பரில் (2011) உள்நாட்டு முனையமும், ஜனவரி (2012) இறுதியில் பன்னாட்டு முனையமும் செயல்பட துவங்கும் என அறிவித்தார்.இதையடுத்து, இரண்டு முனையங்களும் தமிழ் புத்தாண்டில் (ஏப்ரல்) திறக்கப்படும். தற்போது, ஏப்ரலில் புதிய உள்நாட்டு முனையமும், அடுத்த ஐந்து மாதங்களில் பன்னாட்டு முனையமும் பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரண்டு முனையங்களின் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. மிக விரைவில் இந்த முனையங்களைபயணிகள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, விமான நிலைய ஆணையம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், அதிகரித்து வரும் உள்நாட்டு பயணிகள் மற்றும் விமான போக்குவரத்தை கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக புதிய உள்நாட்டு முனையத்தை திறப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வரும் ஏப்ரலில் புதிய உள்நாட்டு முனையம் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்' என்றார்.புதிய உள்நாட்டு முனையத்திற்கான தளங்கள், மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இணைப்பு பாலம் அமைக்கும் பணியும் 80 சதவீதம் முடிந்துள்ளது.அடுத்த கட்டமாக, தகவல் தொழில் நுட்ப கருவிகளை அமைக்க தேவையான கட்டமைப்புக்கள், மின் இணைப்புக்கள் அமைக்க வேண்டும். வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இவை முடியும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.நிலம் கையகப்படுத்துவதில் மாற்றம்?சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்காக மணப்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில், 1,069 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அவற்றை இலவசமாக விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.இதன்படி, இரண்டாவது ரன்வே விரிவாக்கத்திற்காக 128 ஏக்கர் கையகப்படுத்தி, ஒப்படைக்கப்பட்டது. இந் நிலையில், விமான நிலைய விரிவாக்க திட்டத்தில் குறிப்பிட்டிருந்த இணை ஓடுதள திட்டம் ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, விமான நிலைய விரிவாக்கத்திற்கான மொத்த நில தேவை 800 ஏக்கராக குறைந்தது. தற்போது, ஸ்ரீபெரும்புதூர் கிரீன்பீல்டு விமான நிலைய திட்டம் மறுபரிசீலனையில் உள்ளதால், சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.- எஸ்.உமாபதி -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை