உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ் விபத்து 10 ஊழியர்கள் காயம்

பஸ் விபத்து 10 ஊழியர்கள் காயம்

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே சுங்குவார்சத்திரத்தில், பாக்ஸ்கான் என்ற மொபைல்போன் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை பேருந்து, நேற்று மதியம், வேலுாரில் இருந்து, 40க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுடன் சுங்குவார்சத்திரம் வந்தது.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பிள்ளைச்சத்திரம் அருகே சர்வீஸ் சாலையில் இருந்து, பிரதான சாலையில் செல்ல முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மீடியனில் அதிவேகமாக பேருந்து மோதியது.இதில், பேருந்தின் உள்ளே இருந்த, 10 பெண் ஊழியர்கள் காயம் அடைந்தனர். சுங்குவார்சத்திரம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, சந்தவேலுாரில் உள்ள அரசு அவசர சிகிச்சை மையத்திற்கு அனுப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை