உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கெட்டுப்போன ஆட்டிறைச்சி 1,556 கிலோ பறிமுதல்

கெட்டுப்போன ஆட்டிறைச்சி 1,556 கிலோ பறிமுதல்

சென்னை : வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு, மலிவான விலையில் தரமற்ற இறைச்சிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனையாவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.ரயில் வாயிலாக, போலியான முகவரிகளை அளித்து பார்சலில், ஐந்து நாட்களுக்கு மேல் ரயிலில் பயணிக்கும் இறைச்சிகள், எவ்வித பதப்படுத்துதல் இல்லாமல், சுகாதாரமற்ற முறையில் கொண்டு வரப்படுகிறது.அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட 1,700 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை, ஆக., 20ல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இந்த இறைச்சிகள், நட்சத்திர ஹேட்டல்களில் பயன்படுத்துவதாக தகவல் வெளியனதால், அனைத்து ஹோட்டல்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.ஆனாலும், தொடர்ந்து வடமாநிலங்களில் இருந்து, அனுமதி பெறாத மற்றும் பதப்படுத்துதல் இல்லாத இறைச்சிகள் கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது.இந்நிலையில், டில்லியில் இருந்து சென்னைக்கு 7ம் தேதி வந்த ரயிலில் முகவரி அச்சிடப்படாத பார்சல்கள் இருந்தன.ரயில்வே அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், அவை கெட்டுப்போன இறைச்சி என்பது கண்டறியப்பட்டது.தொடர்ந்து, 28 பெட்டிகளில் இருந்த 1,556 கிலோ ஆட்டிறைச்சிகள், ஆட்டுக்கால்கள், காளான்கள், ஷீப்கபாய் போன்றவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர். அவை, கொடுங்கையூர் குப்பை கிடங்களில் அழிக்கப்பட்டன.இதுகுறித்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது:இது போன்ற இறைச்சிகள் போலியான முகவரி அல்லது முகவரி இல்லாத பார்சல்களாக வருகின்றன. எனவே, பார்சல் ஏற்றும்போது முகவரியை உறுதிப்படுத்த, ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, முறைப்படி ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அலமேலு
செப் 10, 2024 16:23

தமிழ்நாட்டை கெடுக்கறதே வடக்ஸ் தான். அது ஆட்டிறைச்சிதானா? பாருங்க ஒட்டகத்தை வெட்டி அனுப்பிருக்கப் போறாங்க.


Rasheel
செப் 10, 2024 12:11

விவேக் காமெடியில் காக்கா பிரியாணி பிரபலம் அடைந்தது போல, இதுவும். பிரியாணி பிரியர்களே வயிற்றில் மற்றும் உயிருடன் ஜாக்கிரதை.