உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏர்போர்ட்டில் ரூ.23 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

ஏர்போர்ட்டில் ரூ.23 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

சென்னை, சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும், தனியார் பயணியர் விமானத்தில் செல்ல வந்த பயணியரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். வட மாநிலத்தைச் சேர்ந்த கங்கா ஆஷார் 36, என்ற இளம்பெண் ஒருவர், இந்த விமானத்தில் சென்னையில் இருந்து இலங்கை செல்வதற்காக வந்திருந்தார். சந்தேகத்தின் அடிப்படையில், பெண் பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்தனர். அவர் உள்ளாடைகளுக்குள், கட்டுக்கட்டாக குவைத் தினார் வெளிநாட்டு பணத்தை பெருமளவு மறைத்து வைத்திருந்தார். அவரிடம் 8,500 குவைத் தினார் இருந்தது. இந்திய மதிப்பில் 23 லட்சம் ரூபாய். இந்த பணத்தை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.பெண் பயணி கங்கா ஆஷாரை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்து, வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ