உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அனுமதி பெறாத விளம்பர பேனர் பாதிப்பு கட்டணம் ரூ.25,000

அனுமதி பெறாத விளம்பர பேனர் பாதிப்பு கட்டணம் ரூ.25,000

சென்னை, சென்னை மாநகராட்சியில், நீதிமன்ற உத்தரவுப்படி விளம்பர பேனர்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த, 2023ல் அமல்படுத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சிகள் விதியில், விளம்பர பேனர்கள் அனுமதி பெற்று வைத்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டது. இதை மேற்கோள் காட்டி, 463 விளம்பர பேனர்களை அமைத்த நிறுவனங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதனால், 'அந்த விளம்பர பேனர்களை அகற்றாமல், பாதிப்பு கட்டணமாக, 25,000 ரூபாய் வரை வசூலித்து கொள்ளலாம்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், சென்னையில் அமைக்கப்பட்ட விளம்பர பேனர்களுக்கு, முறைப்படியான அனுமதி வழங்குவதற்கு, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களுக்கு இதுவரை முறைப்படி அனுமதி வழங்கப்படவில்லை. அதேநேரம், நீதிமன்ற வழக்கு காரணமாக, 463 விளம்பர பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளன. மற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்படும். தற்போது, விளம்பர பேனர்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. பேனர் வைக்க ஆண்டு கட்டணம் 6,000 ரூபாய் வரை வசூலிக்கப்படும். அதிகபட்சமாக 40 அடி அகலம் - 20 அடி நீளத்தில் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.விளம்பர பேனர்கள் முறைப்படுத்தியப்பின், அனுமதி பெறாதவை அகற்றப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !