உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பரிதாப பலி

வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பரிதாப பலி

சென்னை, குன்றத்துார், மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 44. நகை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி யுவராணி, 40. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் வீட்டின் 'டிவி' சரியாக தெரியாததால் அதை சரிசெய்யும் பணியில் மணிகண்டன் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்தது. காப்பாற்ற முயன்ற யுவராணி மீதும் மின்சாரம் பாய்ந்தது.இதை பார்த்த குழந்தைகள் சத்தமிட்டதையடுத்து, அருகில் வசிப்பவர்கள், இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். யுவராணி சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞர் இறப்பு

கொளத்துார், திருப்பதி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள வீட்டின் உரிமையாளர் ராஜன் என்பவர், 'மொபைல் ஆப்' வாயிலாக அவரது வீட்டின் கழிப்றையை சுத்தம் செய்ய பணியாட்களை பதிவு செய்தார்.இதற்காக நேற்று மதியம் 1:30 மணியளவில், புழல், காவாங்கரை இலங்கை அகதிகள் முகாமில் வசித்த சிரேந்தர்ராஜ், 27, என்பவர், தன் உறவினர்களான அகதிகள் முகாமில் வசிக்கும் சனுஜன், 18, சூர்யா, 25, ஆகியோரை அழைத்து, மின்சாரத்தை பயன்படுத்தி இயந்திரம் மூலம் கழிப்பறையை சுத்தம் செய்தனர்.இதில், சனுஜன் மீது மின்சாரம் பாய்ந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் 34; எலக்ட்ரீஷியன். இவர், நேற்று அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் உள்ள சமையல்அறையில், மின் விசிறி மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அரும்பாக்கம் போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்