நிழற்குடை சுத்தம் செய்ய 30 வாகனங்கள்
சென்னை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கட்டட கழிவுகள், சுவரொட்டிகள், விளம்பர பதகைகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன.தொடர்ந்து, நடைபாதைகள், பேருந்து நிழற்குடைகளை சுத்தம் செய்யும் பணிகளுக்கான 30 வாகனங்களை, மாநகராட்சி மேயர் பிரியா, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.அதன்படி, 15 மண்டங்களில் உள்ள 925 பேருந்து நிழற்குடைகள், 173 நடைபாதைகள் சுத்தம் செய்யும் பணிக்காக, முதற்கட்டமாக, மண்டலத்திற்கு தலா இரண்டு வாகனங்கள் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த வாகனங்களில், குடிநீர் வாரியத்தால் கழிவுநீரை மறுசுழற்சி செய்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி, சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.