உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மயிலை நிதி நிறுவன மோசடி தேவநாதன் மீது 3,814 புகார் மனு

மயிலை நிதி நிறுவன மோசடி தேவநாதன் மீது 3,814 புகார் மனு

சென்னை, மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் 3,814 புகார்கள் வந்துள்ளன.லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதியில், பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் தொழில் வர்த்தகர் தேவநாதன்.இவர், மயிலாப்பூர், 'ஹிந்து பர்மனன்ட் பண்டு' நிதி நிறுவனத்தின் தலைவராக இருந்தார். முதலீட்டாளர்கள் பலரிடம், 25 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கூட்டாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில், வழக்கை விசாரித்து வரும் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அலெக்சாண்டர் தலைமையிலான போலீசார், தேவநாதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் இரண்டு நாட்களாக புகார் பெற்றனர்.அதன்படி, மயிலாப்பூர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில், புகார்கள் பெறப்பட்டன. அதில், நிதி நிறுவனத்தில் கட்டிய பணத்திற்கான ஆவணங்கள், ரசீது உள்ளிட்டவற்றின் நகலுடன், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுவரை, 3,814 பேர் அளித்துள்ள புகாரில், 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக புகார் வந்திருக்கிறது. அதன் உண்மை தன்மை விசாரித்து வருவதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ