சென்னை, வளசரவாக்கம், முரளி கிருஷ்ணா நகர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் கமலி, 38. இவரது, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர், கடந்த 24ம் தேதி திருடு போனது. இது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர்.இதில், திருட்டில் ஈடுபட்டது சூளைமேடு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், 19, பட்டூரைச் சேர்ந்த சாய்சரண், 19, என்பது தெரியவந்தது. நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், நான்கு 'டியோ' மற்றும் ஒரு 'ஆக்டிவா' என, ஐந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.அதேபோல், பாரிமுனையில் உள்ள கடையில் பணிபுரிபவர், அம்ருதீன், 39. கடந்த 22ம் தேதி இரவு, பேசின்பாலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இவரது பைக் திருடு போனது.பேசின்பாலம் போலீசாரின் விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த உமர் பாரூக், 43, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், ஐந்து பைக்குகளை பறிமுதல் செய்தனர். சிறுவர்கள் மூவர் கைது
கொடுங்கையூர், நேரு நகரைச் சேர்ந்தவர் உதயகுமார், 30; பிராட்வே ஆர்.பி.எல்., வங்கி ஊழியர்.கடந்த 30ம் தேதி வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இவரது 'பஜாஜ் பல்சர்' பைக் திருடு போனது. கொடுங்கையூர் போலீசாரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.