மேலும் செய்திகள்
மதகு நீரில் தவறி விழுந்து வாலிபர் பலி
27-Aug-2024
சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம் அடுத்த பொம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள், 80; வீட்டிலேயே இட்லி வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.உடலை கைப்பற்றிய போலீசார், சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணையில் கன்னியம்மாள் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல் ஆகியவை திருடு போனது தெரிந்தது. திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் விநாயகம் கூறும்போது, ''நேற்று முன்தினம் மாலை, கொலை நடந்திருக்கலாம். இரவு தான் தெரியவந்தது. மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது,'' என்றார்.
27-Aug-2024