| ADDED : ஜூலை 18, 2024 12:42 AM
ஆவடி, ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் பவித்ரா, 24. இவர், சென்னை போரூர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.நேற்று மதியம் உணவு சாப்பிட 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில், அயப்பாக்கம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அபர்ணா நகர் அருகே வளைவில் திரும்பும்போது, எதிரே வந்த வெள்ளை நிற 'வோல்ஸ் வேகன்' கார் மோதியதில், பவித்ரா ஸ்கூட்டருடன் முள் வேலியில் துாக்கி வீசப்பட்டார்.விபத்து ஏற்படுத்திய 'வோல்ஸ்வேகன்' கார் எதிரே வந்த மற்றொரு 'ஹூண்டாய் அல்கஸார்' கார் மற்றும் 'காஸ்' ஏற்றி சென்ற 'டாடா மேஜிக்' சரக்கு ஆட்டோ மீதுமோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், பவித்ராவின் ஸ்கூட்டர் சுக்குநுாறாக உடைந்தது. கார்கள் மற்றும் சரக்கு ஆட்டோ பலத்த சேதமடைந்தன.ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், பவித்ராவை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர்.விபத்து ஏற்படுத்திய கார்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால், அயப்பாக்கம் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.