| ADDED : ஜூலை 27, 2024 01:31 AM
குன்றத்துார், குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பயணியாற்றுகின்றனர்.இங்கு, பயன்படுத்தப்பட்ட பெயின்ட் ஸ்பிரே டின் மற்றும் 'காஸ்' டின்களை மொத்தமாக வாங்கி, அவற்றை கட் செய்து இயந்திரம் மூலம் அழுத்தம் கொடுத்து கட்டிகளாக மாற்றும் பணி நடந்து வந்தது. இந்த ஸ்பிரே டின்களை கட் செய்யும் போது எதிர்பாரத விதமாக, நேற்று மாலை 6:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் தீயை அணைக்க முயற்ச்சி செய்தனர். ஆனால், ஸ்பிரே டின்கள் வெடித்து சிதறி, தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறினர்.ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள், தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையால், சுற்றுவட்டார மக்கள் சுவாச பிரச்னையால் அவதிக்குள்ளாகினர். இந்த விபத்தில், தொழிற்சாலை முழுதும் எரிந்து நாசமானது. சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.