உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரமாண்ட சமூக நலக்கூடம் ரூ.17 கோடியில் அமைகிறது

பிரமாண்ட சமூக நலக்கூடம் ரூ.17 கோடியில் அமைகிறது

திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலம், 11வது வார்டு மாநகராட்சி சொந்தமான இடத்தில், சி.எம்.டி.ஏ., சார்பில், சமூக நலக்கூடம் கட்டப்பட உள்ளது.மொத்தம் 30,427 சதுர அடி பரப்பளவில், 17 கோடி ரூபாய் செலவில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் அமைகிறது. இதற்கான, பூமி பூஜை நேற்று காலை நடந்தது.திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர், மண்டலக்குழு தலைவர் தனியரசு, மண்டல உதவி கமிஷனர் விஜயபாபு உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டினர்.நவீன சமையல் கூடம், வாகன நிறுத்துமிடம், மின்துாக்கி போன்ற பல வசதிகள் இடம் பெறும் எனவும், பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ