உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் ஆசை காட்டி பணம் பறித்த வாலிபர்

பெண்ணிடம் ஆசை காட்டி பணம் பறித்த வாலிபர்

அண்ணா நகர், திருமண ஆசை காட்டி, நகை மற்றும் பணம் பறித்த விருதுநகர் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சூளைமேடைச் சேர்ந்த 28 வயது பெண், அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.அதன் விபரம்:திருமணம் செய்வதற்காக, திருமண வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தேன். அதை பார்த்து, விருதுநகரைச் சேர்ந்த ரோஷன் என்ற சூர்யா என்பவர் அறிமுகமானார்.இருவரும், ஆறு மாதங்களாக பழகினோர். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை என்னை கட்டாயப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்தார்.தவிர, வீடு கட்டுவதற்காக கூறி, 10 லட்சம் ரூபாய், ஒன்பது சவரன் நகைகளை சிறுக, சிறுக பறித்தார்.அவரது நடவடிக்கை சரியில்லாததால், பணத்தை திரும்ப கேட்ட போது, ஒன்றாக இருந்த வீடியோ, படத்தை காட்டி, பணம் கேட்டு மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புகாரின்படி, விருதுநகர் வாலிபரை, போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி