கிண்டி அரசு மருத்துவமனையில் அன்புச்சுவர்
நங்கநல்லுார், அனைத்து இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச்சங்கம், மகளிர் கூட்டமைப்பு சார்பில், மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.இதில், சாதனை பெண்ணாக, பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் அனுரத்னா கவுரவிக்கப்பட்டார். அவர் எழுதிய 'வண்ணத்துப்பூச்சி' எனும் நுால் வெளியிடப்பட்டது.இதையடுத்து, கிண்டியில் உள்ள கருணாநிதி நுாற்றாண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச்சங்கத்துடன் நலம் செய விரும்பு அமைப்பு இணைந்து, 20,000 ரூபாய் மதிப்பிலான, 'கிவ் - இட், டேக்-இட்' எனும் அன்புச்சுவர் அமைக்கப்பட்டது.இதில், சிகிச்சை பெற வரும் நோயாளிகள், அவர்களின் உதவியாளர்களுக்கு தேவையான சோப்பு, துண்டு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக எடுத்துக் கொள்ளும் வகையில் இடம் பெற்றுள்ளன.ஆலந்துார் மண்டலத்தில் மகளிர் தின விழாஆலந்துார், மார்ச் 9 -மகளிர் தின விழாவை முன்னிட்டு, மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்தில் பணிபுரியும் பெண்களுக்கு விருந்து வைத்து, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்தில் மகளிர் தின விழா மண்டல தலைவர் சந்திரன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.மண்டலத்தில் பணிபுரியும் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. மேலும், புடவை உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் அளித்து கவுரவிக்கப்பட்டனர். மண்டல உதவிக் கமிஷனர், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.மகளிர் தின விழா மினி மாரத்தான் -- படங்கள்