உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரிகளுடன் பேரணி அறிவிப்பு

லாரிகளுடன் பேரணி அறிவிப்பு

மறைமலை நகர், தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், வரும் 20ம் தேதி, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 5,000 லாரிகளுடன் கோட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.நேற்று, சிங்கபெருமாள் கோவிலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் பேசியதாவது:தமிழகத்தில், 11 மாதங்களாக மணல் வழங்கப்படவில்லை. இதனால், மணல் சார்ந்த தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அரசே நேரடியாக மணல் விற்பனையில் ஈடுபட வேண்டும்.அதிக பாரம் ஏற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ