பொது/ சிறுமிக்கு தொல்லை மேலும் ஒருவர் கைது
அண்ணா நகர், அண்ணா நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிந்தது.இது குறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.இதில், சிறுமியின் உறவினரான 14 வயது சிறுவன், பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது.இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.மேலும் சிறுமியின் பெற்றோர், போலீசார் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டினர்.காவல் துறை அதை மறுத்து, விளக்கமும் அளித்தது.இதையடுத்து, இந்த வழக்கு கோயம்பேடு மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் சிறுமியை, சதீஷ்குமார், 32, என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து, நேற்று இவரை கைது செய்து, அண்ணா நகர் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.