உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாஜி ராணுவ வீரர் மீது தாக்குதல்

மாஜி ராணுவ வீரர் மீது தாக்குதல்

வியாசர்பாடி, சென்னை, சவுகார்பேட்டை, மின்ட் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 49. முன்னாள் ராணுவ வீரர். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் பணியாற்றியவர். தற்போது, என்.சி.சி., அலுவலகத்தில், உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், 43 வது பிரதான சாலையில் நின்றிருந்தார். அப்போது, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருந்த வாலிபரை அடையாளம் கண்டு, அழைத்து விசாரித்துக் கொண்டிருந்தார். திடீரென கோபமடைந்த வாலிபர், கீழே கிடந்த பாட்டிலை எடுத்து, ராஜாவை பலமாக தாக்கினார். பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ராஜா சேர்க்கப்பட்டார். இதனிடையே, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார், தாக்குதல் நடத்திய வியாசர்பாடி, காந்திபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ், 29, என்பவரை, நேற்று மதியம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ