உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பார்த்தசாரதி கோவிலில் பவித்ர உற்சவம்

பார்த்தசாரதி கோவிலில் பவித்ர உற்சவம்

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இந்தாண்டு பவித்ர உற்சவம், இன்று முதல் வரும் 19ம் தேதி வரை ஏழு நாட்கள் நடக்கிறது.இதை முன்னிட்டு நேற்று மாலை, அங்குரார்ப்பண யாகசாலை நடந்தது. இரவு, கர்மாவான அங்குரார்ப்பணம் நடந்தது.முதல் நாள் உற்சவமாக, இன்று காலை 9:30 மணிக்கு யாகசாலை ஹோமம், சாத்துமுறை நடக்கிறது.அதைத்தொடர்ந்து, நண்பகல் 12:00 மணிக்கு பார்த்தசாரதி பெருமாளுக்கு சதகலச திருமஞ்சம் நடக்கிறது. மாலை, பவித்ரம் சமர்ப்பிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை