மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி - மதுரை
21-Aug-2024
புளியந்தோப்பு:அம்பத்துாரை சேர்ந்தவர் சண்முகவேல், 52. இவர், புதுார் - வள்ளாலார் நகர் செல்லும் தடம் எண் 48 பி பேருந்தின் ஓட்டுனராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், அம்பேத்கர் கல்லுாரி சாலையில் வந்து கொண்டிருந்த போது, மது போதையில் இருந்த நால்வர், பேருந்தின் இடது பக்க, பக்கவாட்டு கண்ணாடியை கல்லால் அடித்து விட்டு மாயமாகினர். இதுகுறித்து, பேசின்பாலம் காவல்நிலையத்தில் சண்முகவேல் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
21-Aug-2024