உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 51.68 மில்லியன் டன் சரக்கு சென்னை துறைமுகம் சாதனை

51.68 மில்லியன் டன் சரக்கு சென்னை துறைமுகம் சாதனை

சென்னை, சென்னை துறைமுகத்தில் இருந்து கார்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இயந்திரங்கள், மருந்து பொருட்கள், மின்னணு மற்றும் மின் சாதனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்யப்படுகின்றன.இந்த துறைமுகத்தில் கையாளும் சரக்குகளை அதிகரிக்கும் வகையில், தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நடப்பு நிதியாண்டில், நேற்று முன்தினம் வரையில், 51.68 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு, புதிய சாதனை படைத்துள்ளது.இதுவே, கடந்த 2023 - -24ம் ஆண்டில், 51.60 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு, சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி