உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூட் தல பிரச்னையில் மோதல் கல்லுாரி மாணவருக்கு காயம்

ரூட் தல பிரச்னையில் மோதல் கல்லுாரி மாணவருக்கு காயம்

கீழ்ப்பாக்கம், 'ரூட் தல' பிரச்னையால், கல்லுாரிக்குள் மோதிக் கொண்ட மாணவர்கள், கல் மற்றும் கட்டையால் தாக்கிக் கொண்டனர்.கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லுாரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகின்றன.நேற்று முன்தினம் தேர்வுகள் முடிந்த பின், மதியம் 12:30 மணியளவில், கல்லுாரி முதல்வர் அறைக்கு முன், மூன்று மாணவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.திடீரென மாணவர் ஒருவர், அங்கு கிடந்த கல்லை எடுத்து, மற்றொரு மாணவரை தாக்கியுள்ளார். பின், அவர்கள் கற்கள், கட்டை மற்றும் அங்கிருந்த பொருட்களால், மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதையறிந்த கல்லுாரி நிர்வாகத்தினர், மாணவர்களிடம் பேச்சு நடத்தி அனுப்பி வைத்ததாக தெரிகிறது.இதில் காயமடைந்த மாணவர் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.இதுகுறித்து, போலீசாருக்கு யாரும் புகார் அளிக்கவில்லை. நேற்று காலை, சம்பவம் குறித்து அறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார், கல்லுாரியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரித்தனர்.முதற்கட்ட விசாரணையில், பூந்தமல்லி பேருந்து வழித்தடத்தைச் சேர்ந்த, அக்கல்லுாரியில் பொருளாதாரம் மூன்றாமாண்டு படிக்கும் பீட்டர், 21, என்ற மாணவரை, பாரிமுனை பேருந்து வழித்தடத்தைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் மைதீன் உள்ளிட்ட சில மாணவர்கள் சேர்ந்து தாக்கியது தெரிந்தது.இவர்களுக்குள் 'ரூட் தல' பிரச்னையால் சம்பவம் நடந்ததாக தெரிந்துள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களின் வீட்டிற்குச் சென்று, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ