மேலும் செய்திகள்
நடைபாதை ஆக்கிரமிப்பு தி.நகரில் அகற்றம்
11-Mar-2025
சென்னை,சென்னையில் பள்ளி, கல்லுாரிகளில் அதிகளவில் போதை பொருட்கள் பயன்பாடு இருப்பதற்கு, அருகே உள்ள பெட்டிக்கடைகள் தான் முக்கிய காரணம் என, மாநகராட்சிக்கு, போலீசார் எச்சரித்தனர். தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவின்படி, நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில், அனைத்து மண்டல அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 11ம் தேதி, தேனாம்பேட்டை மண்டலம், 122வது வார்டுக்கு உட்பட்ட கே.பி.தாசன் சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட எட்டு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.அகற்றிய மறுநாளே, ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் கடைகள், ஆங்காங்கே மீண்டும் வைக்கப்பட்டன.இதுகுறித்து புகார்கள் வந்ததை அடுத்து, நேற்று மீண்டும், கே.பி.தாசன் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை, பொக்லைன் இயந்திரத்தால் உடைத்து அகற்றம் செய்தனர்.மேலும், வணிக நிறுவனங்கள் நடைபாதையில் வைத்திருந்த பதாகைகளையும், இடித்து அகற்றினர்.அப்போது, அங்கு வந்த, 123வது வார்டு தி.மு.க., கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் சரஸ்வதி, ஆக்கிரமிப்பு அகற்றவிடாமல், அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டார். ஆனாலும் அதிகாரிகள், 10 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.
11-Mar-2025