பிட் புல் நாய் கடித்து நாட்டு நாய் படுகாயம்
அம்பத்துார்:அம்பத்துார், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன், 47; தச்சு தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர மகாலிங்கம், 50; மளிகை கடைக்காரர். சுந்தர மகாலிங்கம், தடை செய்யப்பட்ட 'பிட் புல்' ரக நாயை வளர்த்து வருகிறார். தினமும் வாயை மூடாமல், வெளியில் அழைத்து வருவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி காலை பிரபாகரன், தன் வீட்டில் வளர்க்கும் நாட்டு நாயை வெளியில் அழைத்து வந்துள்ளார்.அப்போது, எதிரில் அழைத்து வரப்பட்ட பிட் புல் நாய், நாட்டு நாயின் வாயை கடித்து குதறியது. வலியால் துடித்த, நாட்டு நாயை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. சில நிமிடங்கள் கழித்து பிட்புல் நாய், நாட்டு நாயை விடுவித்தது. இதில், நாட்டு நாய் பலத்த காயமடைந்தது. இதுகுறித்து பிரபாகரன், நேற்று அளித்த புகாரின் படி, அம்பத்துார் போலீசார்விசாரிக்கின்றனர்.