பட்டா கத்தியால் கேக் வெட்டி கும்பல் அட்ராசிட்டி
அம்பத்துார், அம்பத்துார், அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர், சுதாகர் என்ற சுதா ஜெரி, 29. ஜூலை 31ல், சுதாகர் தன் பிறந்த நாளை, நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். கேக்கை பட்டாகத்தியால் வெட்டி, அதே கத்தியால் நண்பர்களுக்கும் ஊட்டிவிட்டார். கழுத்தில் மாலை, தலையில் கிரீடத்துடன் சாலையில் வாகனங்களை நிறுத்தி, இந்த கும்பல் இடையூறு ஏற்படுத்திய காட்சிகள் வீடியோவாக வெளியாகி உள்ளன. இதுகுறித்த புகார்கள் வந்துள்ள நிலையில், போலீசார் விசாரிக்கின்றனர்.