மது அருந்துவதில் தகராறு வாலிபருக்கு வெட்டு
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை கோதண்டராமன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 27; ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லுாரியில் சட்டம் படித்து வருகிறார். இவர், தன் நண்பர் பாலாஜியுடன் 'பைக்'கில், தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெரு வழியாக சென்றார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராமு என்பவர் மது அருந்தியுள்ளார். இதுகுறித்து கார்த்திக் கேட்க, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த ராமு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கின் கையை வெட்டி விட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த கார்த்திக்கை, அவரது நண்பர் பாலாஜி மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். தண்டையார்பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்ததில், முன்விரோதம் காரணமாக ராமு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. தலைமறைவான ராமுவை தேடி வருகின்றனர்.