உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கந்துவட்டி கொடுமை பெண் தாதா கைது

கந்துவட்டி கொடுமை பெண் தாதா கைது

சென்னை, சென்னை, புளியந்தோப்பு 3வது தெருவைச் சேர்ந்தவர் மாஜர்கான், 44. வீடு வாடகை மற்றும் விற்பனை தரகராக உள்ளார். இவர், அஞ்சலை என்பவரிடம் கடந்தாண்டு நவம்பர் மாதம் 40 சதவீத வட்டிக்கு 4 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார்.மாதம் 1.60 லட்ச ரூபாய் வீதம் 8 லட்ச ரூபாய் பணம் திரும்ப செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.ஆனால், 'இன்னும் 9.50 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும்' என, அடியாட்களை வைத்து அஞ்சலை மிரட்டியதாக, மாஜர்கான் புளியந்தோப்பு போலீசில் புகார் அளித்தார்.போலீசாரின் விசாரணையில், கந்துவட்டி கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அஞ்சலையை போலீசார் கைது செய்தனர். இவர் மீது, ஏற்கனவே கந்துவட்டி உள்ளிட்ட ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ