உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாழ்வான மின் கம்பிகளால் விபத்து அபாயம்

தாழ்வான மின் கம்பிகளால் விபத்து அபாயம்

மேடவாக்கம், பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம், ரங்கநாதபுரம், குலசேகர ஆழ்வார் தெருவின் நுழைவுப் பகுதியில், வாகனங்கள் பழுது நீக்கும் நிலையம் உள்ளது. இதன் எதிரே, இரு மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் கம்பிகள் மிகவும் தாழ்வாக, கைக்கு எட்டும் உயரத்தில் உள்ளன.காற்றின் வேகத்திற்கு ஏற்ப அசையும் இந்த மின்கம்பிகள், அருகில் உள்ள கடையின் கூரை மீதோ, வீட்டுச் சுவற்றின் மீதோ உராய்ந்தால், மின் விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது.தவிர, இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மீதும் உராய்ந்து விபத்து நிகழ வாய்ப்புள்ளது.அசம்பாவிதங்கள் நிகழும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மின் கம்பிகளை சரியான உயரத்திற்கு அமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் புகார் தெரிவித்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !