உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவியின் கல்விக்கு உதவிய துணை கமிஷனர்

மாணவியின் கல்விக்கு உதவிய துணை கமிஷனர்

பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை, போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயனிடம் மறைமலை நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் புகார் மனு அளித்திருந்தார். அதில், 'தன் கணவர் இறந்து விட்டதால் சொந்த ஊரில் வீட்டு வேலை பார்த்து வருகிறேன். மகள் சத்தியஜோதி பி.இ., ஆர்க்., முதலாமாண்டு படித்து வந்தார்.இந்நிலையில், தன்னிடம் இருந்த சேமிப்பு தொகையை குத்தகைக்கு வீடு பிடித்து தருவதாக கூறி, 2.50 லட்சம் ரூபாய் பெற்ற ஒருவர் ஏமாற்றி வருகிறார். இதனால் மகளின் கல்லுாரி படிப்பை தொடர முடியவில்லை. பணத்தை பெற்று தர வேண்டும்' என கோரியிருந்தார்.இந்த மனுவை துணை கமிஷனர் விசாரித்தார். வியாபாரிகளிடம் இருந்து நிதி உதவி பெற்று 1 லட்சம் ரூபாயை மாணவி சத்தியஜோதியிடம் வழங்கினார்.மேலும், ராஜேஸ்வரியின் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை