உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேம்பாட்டு பணி 6 விரைவு ரயில்கள் ரத்து

மேம்பாட்டு பணி 6 விரைவு ரயில்கள் ரத்து

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, ஆறு ரயில்களின் சேவை முழுதுமாகவும், 20 ரயில்களின் சேவை ஒரு பகுதியாகவும் ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ★ கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூர் – சென்ட்ரல் ரயில் வரும் ஜூலை 31ம் தேதியிலும், சென்ட்ரல் – யஷ்வந்த்பூர் ரயில் வரும் ஆக., 1ம் தேதியிலும் ரத்து செய்யப்படுகிறது ★ யஷ்வந்த்பூர் – கர்நாடகா மாநிலம் மங்களூரு ரயில் வரும் ஆக., 2ம் தேதியிலும், மங்களூரு – யஷ்வந்த்பூர் வரும் ஆக., 3ம் தேதியிலும் ரத்து செய்யப்படுகிறது ★ கர்நாடகா மாநிலம் மைசூர் – ரேணிகுண்டா ரயில் வரும் ஜூலை 31ம் தேதியிலும், ரேணிகுண்டா – மைசூர் ரயில் வரும் ஆக., 1ம் தேதியிலும் ரத்து செய்யப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ