உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பைக்கிடங்கால் பக்தர்கள் வேதனை

குப்பைக்கிடங்கால் பக்தர்கள் வேதனை

பூந்தமல்லி, பூந்தமல்லி ஒன்றியத்தில் காட்டுப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. பூந்தமல்லி - --போரூர் செல்லும் சாலையில், காட்டுப்பாக்கத்தில் பூரிமரத் தவ முனீஸ்வரர் கோவில் உள்ளது. போரூர் அருகே, சென்னை புறநகரில் காட்டுப்பாக்கம் உள்ளதால், அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட ஏராளமான வீடுகள் உள்ளன.இந்த ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், இந்த கோவிலின் பின்புறம், மதில் சுவரையொட்டி கொட்டி மலை போல் குவிக்கப்பட்டுஉள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் தரம் பிரித்து அகற்றப்படுகிறது. ஆனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக, சுவாமி கும்பிட முடியாத நிலை உள்ளது. எனவே, குப்பை கழிவுகளை வேறு பகுதியில் கொட்டி, தரம் பிரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை