உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசிமேடில் பெரிய மீன்கள் வரத்து குறைவால் ஏமாற்றம்

காசிமேடில் பெரிய மீன்கள் வரத்து குறைவால் ஏமாற்றம்

காசிமேடு:தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தபின், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று 100க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின.இதில், சங்கரா, தும்பிலி, நெத்திலி, கடமா, நவரை, கிளிச்ச, வெள்ள ஊடான் உள்ளிட்ட சிறிய மீன்களின் வரத்து அதிகளவில் விற்பனைக்கு வந்தன. வஞ்சிரம், பாறை, திருக்கை, கொடுவா, பர்லா உள்ளிட்ட பெரிய மீன்களின் வரத்து விரவில் விட்டு எண்ணும் அளவிற்கே காணப்பட்டன.நேற்று அதிகாலை 2:00 மணி முதல் காசிமேடில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், அப்பகுதியே திருவிழா போல் காட்சியளித்தது. இருந்தும் பெரிய மீன்களின் வரத்து இல்லாததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சிறிய மீன்களின் வரத்து அதிகளவில் இருந்ததால், மீன் விலை குறைந்து காணப்பட்டது. கடலில் இரு வாரங்கள் தங்கி மீன்பிடித்த படகுகள் அடுத்த வாரம், கரை திரும்ப உள்ளன. அப்போது பெரிய மீன்களின் வரத்து அதிகம் இருக்கும்,'' என்றனர்.மீன்வரத்து அதிகம் இருந்ததால் மீன்களை பேரம் பேசி வாங்க முடிந்தது. பெரிய கொடுவா ஒன்று 500 ரூபாய்க்கும்; நண்டு 200 ரூபாய்க்கும்; இறால் 300 ரூபாய்க்கும் வாங்கினேன். அடுத்த வாரங்களில், இதை விட மீன் விலை குறைவாக இருக்கும் என எதிர்ப்பாக்கிறோம்.ஜான்,வண்ணாரப்பேட்டைமீன் விலை நிலவரம்வகை கிலோ (ரூ.)சிறிய வஞ்சிரம் 1,000 - 1,200வவ்வால் 700 - 1,500கொடுவா 500 - 1,000சின்ன கொடுவா 300சங்கரா 200 - 600கனாகத்த 150 200சீலா 150 - 250நெத்திலி 200 - 250மத்தி 100வாளை 200கவளை 150நண்டு 200 - 600வெள்ள ஊடான் 100நவர - 100 - 150தேரல் பாறை 250 - 300இறால் 300 - 500கடம்பா 150 - 300


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

மச்சகந்தி
ஜூன் 24, 2024 09:00

எங்கே வரும்? ரெண்டாயிரம் பேர் மீன் பிடிச்ச காலம் போய், ரெண்டு லட்சம்.பேர் படகு, விசைப்படகு, சுருக்கு மடி ந்னு தடை நீங்கிய மறு நாளே போய் குஞ்சும்.குளுவானுமா அள்ளிட்டு வந்தாச்சு. அங்கே வளர்ந்து பெருசாவறதுக்கு என்ன இருக்கும்? ஆறு மாசத் தடை போறாது. ஆறு வருஷம் தடை விதிக்கணும். போய் ஆப்ப்ரிக்கா, ஆஸ்திரேலியா சைடில் மீன் பிடிக்க முடியுமான்னு பாருங்க. சீனாக்காரன் அங்கேதான் போறானாம். இண்ட்டர் நேஷனல் வாட்டர். யாரும் கேள்வி.கேக்க மாட்டாங்களாம்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ