மேலும் செய்திகள்
'ஏ' டிவி ஷ ன் வாலிபால்: ஐ.சி.எப்., அணி வெற்றி
11-Sep-2024
சென்னை, தமிழ்நாடு வாலிபால் கழகம் ஆதரவுடன், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், எஸ்.என்.ஜே., குழுமம் நடத்தும் மாவட்ட அளவிலான 'ஏ' டிவிஷன் வாலிபால் போட்டிகள், எழும்பூர், ராதாகிருஷ்ணன் அரங்கில் நடந்து வருகின்றன.இதில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, இந்தியன் வங்கி, டி.ஜி.வைஷ்ணவ் உட்பட எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில், போட்டிகள் நடக்கின்றன.நேற்று முன்தினம் இரவு நடந்த 'லீக்' போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியை எதிர்த்து களமிறங்கிய இந்தியன் வங்கி அணி, முதல் இரு செட்களையும் 25 -- 23, 25 -- 19 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.சுதாரித்த எஸ்.ஆர்.எம்., அணியினர், அடுத்த மூன்று செட்களிலும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 -- 16, 26 -- 24, 15 -- 10 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி, 3 - 2 என்ற கணக்கில், வெற்றியை சுவைத்தனர்.எஸ்.ஆர்.எம்., அணியின் சித்திரைப்பாண்டியன் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, ஒரு கிராம் தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
11-Sep-2024