உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 112 ஏக்கரில் விளையாட்டு நகரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பெருமிதம் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் பெருமிதம்

112 ஏக்கரில் விளையாட்டு நகரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பெருமிதம் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் பெருமிதம்

சென்னை, ''சோழிங்கநல்லுார் தொகுதியில், 112 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைவது தொகுதிக்கு கிடைத்த பெருமை,'' என, எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் கூறினார்.இது குறித்து சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் கூறியதாவது: தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட சோழிங்கநல்லுார் தொகுதியில், உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ், 20 வார்டுகள் கொண்ட இரண்டு மண்டலங்கள் மற்றும் ஏழு ஊராட்சிகள் உள்ளன. கடந்த 2010ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியின்போது, 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் பெயரளவில் தான் பணிகள் நடந்தன. கடந்த நான்கு ஆண்டுகளில், மக்கள் குறை கூறாத வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம்.பெரிய தொகுதியானதால், அரசு திட்டம் துவங்குவது, பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என, தினம் ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கல்விக்காக அதிக நிதி ஒதுக்கினேன். இலவச பயணம், உரிமை தொகையால், எங்கள் வாழ்க்கை தரம் மேம்பட்டு வருவதாக, நான் செல்லும் இடமெல்லாம் பெண்கள் கூறுகின்றனர்.அது எனக்கு மனநிறைவை கொடுக்கிறது. மூடுகால்வாய், வடிகால்கள் கட்டி வெள்ள பாதிப்பை குறைத்துள்ளோம். தொகுதியில், 112 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைவது தொகுதிக்கு கிடைத்த பெருமை.வெவ்வேறு இடங்களில், வாடகை கட்டடங்களில் செயல்படும் ஏழு அரசு துறைகளை, 4 ஏக்கரில் ஒருங்கிணைந்த கட்டடமாக கொண்டு வர முயற்சி செய்கிறேன். விரைவில் நிறைவேறும். ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., உள்ளடக்கிய இந்த தொகுதி அபார வளர்ச்சி அடைந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !