கால்வாயில் விழுந்த போதை நபர் மீட்பு
வேளச்சேரி, பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் சங்கர், 40. நேற்று, போதையில் வேளச்சேரி, வீராங்கால் கால்வாய் தடுப்பு சுவரில் துாங்கி உள்ளார். சிறிது நேரத்தில், கால்வாய்க்குள் விழுந்தார். சகதியில் சிக்கி பல மணி நேரம் வெளியே வர முடியாமல் தவித்தார்.போதை குறைந்ததும் கரையோரம் சாய்ந்து அமர்ந்தபடி, சத்தம் போட்டார். வாகன ஓட்டிகள், வேளச்சேரி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், கயிறு, ஏணி பயன்படுத்தி, சங்கரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.