உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை வளைவில் மின் கம்பம் கோவிலம்பாக்கத்தில் ஆபத்து

சாலை வளைவில் மின் கம்பம் கோவிலம்பாக்கத்தில் ஆபத்து

கோவிலம்பாக்கம், கோவிலம்பாக்கம்- - எஸ்.கொளத்துார் பிரதான சாலையில், இடப்புறம் அரசு பள்ளி அமைந்துள்ளது. இதில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.கோவிலம்பாக்கத்திலிருந்து எஸ்.கொளத்துார் நோக்கி செல்லும் வாகனங்கள், பள்ளியை ஒட்டியுள்ள வளைவில் திரும்பும் இடத்தில், அபாயகரமான நிலையில் மின் கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது.சாலையின் ஓரத்தில் குவிந்துள்ள மண் குவியல்களை அகற்றாததால், சாலையும் அவ்விடத்தில் சுருங்கி உள்ளது. இதனால், வேகமாக வரும் வாகனங்கள், அம்மின் கம்பத்தில் மோதி பெரும் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், வளைவில் உள்ள மின் கம்பத்தை அகற்றி, சாலையின் ஓரத்தில் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ