உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3ஜி கூட கிடைக்கவில்லை பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் புலம்பல்

3ஜி கூட கிடைக்கவில்லை பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் புலம்பல்

சென்னை, சென்னையில் உள்ள பல பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., இணையதள மற்றும் சிக்னல் பிரச்னை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., பிரீ பெய்டு, போஸ்ட் பெய்டு, பாரத் பைபர் என பல சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள கீழ்பாக்கம், அண்ணாசாலை, திருவொற்றியூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நெட்வொர்க் பிரச்னை, இணையதள சிக்னல் பிரச்னை தொடர்கதையாகி வருகிறது. குறைந்த கட்டணத்தில் ரீசார்ஜ் வழங்கினாலும், அடிப்படை சேவைகளில் தொடர்ந்து பிரச்னை ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் கூறியதாவது:நந்தம்பாக்கத்தில் உள்ள மருத்துமனைக்கு சென்றிருந்தோம். அங்கு திடீரென பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைக்கவில்லை. அவசரத்திற்கு உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கான காரணம் குறித்து பி.எஸ்.என்.எல்., சென்னை டெலிபோன் அதிகாரிகளை கேட்ட போது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ