உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மருந்தகத்தில் பணம் பறிப்பு

மருந்தகத்தில் பணம் பறிப்பு

பள்ளிக்கரணை, வேளச்சேரி, பிலிம் தெருவைச் சேர்ந்தவர் கோகுலன், 21. இவர், பள்ளிக்கரணை, ஆயில் மில் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் கடையில் இருந்தார். அப்போது,'ஹெல்மெட்' அணிந்து வந்த மர்ம நபர்கள் மூவர், மருந்து வாங்குவது போல உள்ளே நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டிஉள்ளனர்.பின், கல்லாபெட்டியில் இருந்த 17,000 ரூபாயை எடுத்துக் கொண்டு, 'பைக்'கில் தப்பிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து கோகுலன் அளித்த புகாரின்படி, பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி