உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எலி மருந்து சாப்பிட்ட பெண் போலீஸ்

எலி மருந்து சாப்பிட்ட பெண் போலீஸ்

சென்னை, அயனாவரம், பாரத மாத தெருவைச் சேர்ந்தவர் தங்க மீனா, 28; ஆயுதப்படை பெண் போலீஸ். கடந்த சில மாதங்களாகவே கடன் பிரச்னையால், குடும்பத்தினருக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை, எழும்பூர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். உடனிருந்த பெண் போலீசார் கேட்ட போது, உடல்நிலை சரியில்லை எனக் கூறியுள்ளார். மாலை வீட்டிற்கு சென்றபோது, மிகவும் உடல் நிலை மோசமாகியுள்ளது. தொடர்ந்து, அவரது தம்பி ஜெயராமன் என்பவர் விசாரித்த போது, குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார்.உடனே அவரை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை