உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அதிவேகமாக வந்த கார் மோதியதில் மீனவர் பலி

அதிவேகமாக வந்த கார் மோதியதில் மீனவர் பலி

திருவொற்றியூர்:திருவொற்றியூர், குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 57; மீனவர். நேற்று முன்தினம் இரவு, ஈசாணி மூர்த்தி கோவில் தெருவில் இருந்து, திருவொற்றியூர் குப்பம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.திருவொற்றியூர் குப்பம் அருகே, எண்ணுார் விரைவு சாலையை கடந்தபோது, எண்ணுாரில் இருந்து ராயபுரம் நோக்கி, அதிவேகமாக சென்ற கார், கன்னியப்பன் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது.இதில், பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து, திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ