உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செக் மோசடியில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் கைது

செக் மோசடியில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் கைது

மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி, 50; அரசு ஒப்பந்ததாரர். இவரிடம், செங்கல்பட்டில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வரும் கலா, 42, என்பவர், குடும்ப செலவிற்காகவும், தன் மருமகன் குறும்படம் எடுக்கவும் 21.73 லட்சம் ரூபாய் கடனாக பெற்று உள்ளார்.பணத்தை திரும்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும், போலி வங்கி கணக்கு காசோலை கொடுத்து, பார்த்தசாரதியை ஏமாற்றி உள்ளார். மறைமலை நகர் போலீசார், கலாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
மே 26, 2024 05:37

ஒரு சத்துணவு அமைப்பாளரின் சம்பளத்தை நம்பி இவ்வளவு பெரிய தொகையை கடனாகக் கொடுத்தாரா? நம்ப முடியவில்லையே. வேற ஏதோ இருக்கிறது.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ