உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குவைத் விமானத்தில் புகைத்த பயணியரால் சலசலப்பு

குவைத் விமானத்தில் புகைத்த பயணியரால் சலசலப்பு

சென்னை:குவைத் நாட்டில் இருந்து சென்னைக்கு 178 பயணியருடன், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், புறப்பட்டது.அதில் பயணித்த, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயது பாரூக் என்பவர், கழிப்பறையை பயன்படுத்திய போது, விமானத்தில் புகை வாடை வந்துள்ளது.இது குறித்து பயணியர், விமானப் பணிப்பெண்களிடம் புகார் அளித்தனர். கழிப்பறையில் இருந்து வந்த பாரூக்கிட் விசாரித்தபோது, அவர் வாயிலிருந்து புகை நாற்றம் வந்துள்ளது.இது குறித்து தலைமை விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பினார். இதையடுத்து, தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை நிலையத்திற்கு வந்த விமானத்தில் ஏறி, பாரூக்கின் குடியுரிமையை சோதனை செய்தனர்.பின், அவரை விசாரித்ததில், அவர் குவைத்தில் இரண்டாண்டுகள் டிரைவர் வேலை செய்து, விடுமுறையில் சொந்த ஊர் திரும்புவதாகவும், விமான விதிமுறைகள் அறியாததால், தவறுதலாக புகைத்ததாகவும் கூறினார்.மேலும், தன் மீது வழக்கு பதிந்தால், மீண்டும் வேலைக்கு செல்ல முடியாத நிலை உருவாகும் என அழுதார். இதையடுத்து, அவரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிய விமான நிலைய போலீசார், கடுமையாக எச்சரித்து, அவரை சொந்த ஊருக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை