சிறுமிக்கு பாலியல் தொல்லை காதலன், ஓட்டுனருக்கு போக்சோ
கோயம்பேடு, கோயம்பேடு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண், தன் 16 வயது மகளை காணவில்லை என, கோயம்பேடு காவல் நிலையத்தில், கடந்த 24ம் தேதி புகார் அளித்தார்.போலீஸ் விசாரணையில், சிறுமி 'ஷேர் சேட்' செயலி வாயிலாக, 15 நாட்களுக்கு முன் பழகிய விக்னேஷ் என்ற காதலனை தேடிச் சென்றது தெரிந்தது.சிறுமி பெங்களூரில் இருப்பது தெரிந்தது. போலீசார் அங்கு சென்று சிறுமி மற்றும், அவரது காதலன் விக்னேஷ், 26, என்பவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில் தெரிந்ததாவது:சிறுமி, கடந்த 24ம் தேதி, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு தனியாக ஆட்டோவில் சென்றுள்ளார்.அப்போது பேச்சு கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் ராதா கிருஷ்ணன், 46, என்பவர், தானும் திருவண்ணாமலை செல்ல வேண்டுமெனக் கூறி, பேருந்தில் சிறுமியுடன் பயணித்துள்ளார். அப்போது, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.இவ்வாறு, விசாரணையில் தெரிந்தது.இதையடுத்து, பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த, கோயம்பேடு பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் ராதாகிருஷ்ணனை, போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.இந்த வழக்கு, கோயம்பேடு மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, ராதாகிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் மீது,'போக்சோ' வழக்கு பதிந்து, நேற்று கைது செய்தனர்.