உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரேஷன் கடை அருகே அத்துமீறி பார்க்கிங்

ரேஷன் கடை அருகே அத்துமீறி பார்க்கிங்

சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், 137வது வார்டு அண்ணா பிரதான சாலையில், அம்மா உணவகம் மற்றும் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள், அம்மா உணவகத்தில் உணவு அருந்தவும், ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கவும் வந்து செல்கின்றனர். இந்த அம்மா உணவகம், ரேஷன் கடையின் முன், சாலையை ஆக்கிரமித்து லோடு ஆட்டோக்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இது, ரேஷன் கடை மற்றும் அம்மா உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறாக உள்ளது. அத்துடன், வாகன ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, அண்ணா பிரதான சாலையில் உள்ள வாகன ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை