உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 58 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

58 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

காரப்பாக்கம், சென்னையில், அரசு பள்ளியில் 10ம் வகுப்பில், முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, காரப்பாக்கத்தில் நேற்று நடந்தது.இதில், சோழிங்கநல்லுார் தொகுதிக்கு உட்பட்ட, 14 அரசு உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 58 மாணவ - மாணவியருக்கு, 10,000, 5,000 மற்றும் 3,000 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.மேலும், விளையாட்டில் சிறந்து விளங்கும் இரண்டு குழுக்களுக்கு, தலா 50,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. ஊக்கத்தொகையை, 198வது வார்டு கவுன்சிலர் லியோ சுந்தரம் ஏற்பாட்டில், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கி, தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை